கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் விநாயகர் சதுர்த்தி விழா அன்று விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தடை விதித்தது கண்டித்தும் திருச்சி இபி ரோடு பூலோகநாதர் கோவில் முன்பாக தமிழ்நாடு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு இந்து முன்னணி திருச்சி கோட்ட செயலாளர் போஜராஜன் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து போஜராஜன் கூறுகையில்….. இந்துக்களை தொடர்ந்து தமிழக அரசு வஞ்சிக்கிறது.
இந்துக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி மூலமாக பரவும் என்று கூறுவது தவறு. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவோம் என்று தெரிவித்ததார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments