Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

வாசிப்பை நேசிப்போம் திருச்சியில் நாளை தொடக்கம்! தன்னார்வலர்கள் தேவை

திருச்சியில் வரும் 23 ந்தேதி டான்போஸ்கோ வளாகத்தில் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து வாசிப்போம் நேசிப்போம் எனும் இயக்கத்தை தொடங்கவுள்ளனர். பள்ளிகளில் தனி நூலகங்களை அமைத்தல், அதற்கான கொடையாளர்களைக் கண்டறிதல், பொதுநூலகத்துறையுடன் இணைந்து வழங்குமுனை நூலகங்களை அமைத்தல். குடியிருப்போர் நலச்சங்கங்களின் உதவியுடன் அடுக்ககங்களில் நூலகங்களை உருவாக்குதல். வாசித்த நூல்களை நன்கொடையாகப் பெற்று, புத்தக வங்கிகளைக் கட்டமைத்தல், புத்தக வங்கிகளின் உதவியுடன் நடமாடும் நூலகங்களை உருவாக்குதல்.

பள்ளிகள், பூங்காக்கள், அடுக்ககங்களின் பொதுவெளிகளில் சிறார்களுக்குக் கதை சொல்லுதல். சிறார்களை வாசிக்கச் செய்தல். அருகிலுள்ள நூலகங்களில் அவர்களை உறுப்பினர்களாக்குதல். செய்தல். புத்தகங்கள், வாசிப்பின் அவசியம் பற்றி இளம்தலைமுறையினரிடம் பேசுதல், அவர்களது ஆர்வத்தைத் தூண்டுதல். பிரபலங்களைக் கொண்டு வாசிப்பின் முக்கியத்துவம் பற்றியும், அவர்கள் வாசித்த புத்தகங்கள் பற்றியும் பேசவைத்தல்.

புத்தகங்கள் தொடர்பான எளிய வினாடி வினா போட்டிகளை நடத்திப் பரிசுகளை வழங்குதல். அதிக புத்தகங்களை வாசித்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளை வழங்குதல். தாங்கள் படித்த புத்தகங்கள் பற்றியும் அவற்றின் உள்ளடக்கம் பற்றியும் மாணவர்களைக் கலந்துரையாடச்செய்தல். ஊடகங்கள் மூலம் இத்தகைய செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச்சென்று இதனை ஓர் இயக்கமாக வலுப்பெறச் செய்தல் என்பன போன்றவை வாசிப்போம் நேசிப்போம் இயகத்தின் செயல்திட்டக்கூறுகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், பதிப்பாளர்கள் சங்கம், மக்கள் ஊடக மையம். திருச்சி விஷன், நம்ம பெரம்பலூர்மின்னிதழ், யூத் எக்ஸ்னோரா போன்ற அமைப்புகள் இச்சேவையில் பங்கெடுக்க உள்ளன. அனைவரையும் ஒருங்கிணைத்து திட்டத்துக்கு தனிநபரையோ அமைப்பையோ முன்னிறுத்தாத கூட்டமைப்பாக இது செயல்படும்என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர் .எல்லோரிடமும் புத்தக வாசிப்பை கொண்டு சேர்ப்பதற்கு  தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர்.தொடர்புக்கு +91 99019 65430 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *