திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள வாரசந்தையில் பொது மக்களிடையே மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் மதுவினால் ஏற்படும் சமூக சீர்கேடுகளும், சீரழிவுகளும் பொருளாதார இழப்புகளும், உடல்ரீதியான, உள்ள ரீதியான பாதிப்புகளை
புதிய தமிழகம் கட்சி தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமியால் எழுதப்பட்ட TASMAC குடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம்! என்ற வாசகம் அடங்கிய புத்தகத்தை மது இல்லாத புதிய தமிழகம் படைப்போம்! என்ற நூலினை சமயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட சந்தை, வணிக வளாகம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு முன்பு பக்தர்களிடமும்,
பொதுமக்களிடமும் புதிய நூல் வழங்கி புதிய தமிழகம் கட்சி மாநில துணைக் கொள்கை பரப்பு செயலாளர் வாழையூர் குணா, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ம.தினகரன் மாநில இளைஞரணி குழு உறுப்பினர் விஜய பிரபு, சமயபுரம் பேரூர் கழக கிளை நிர்வாகிகளான மாதேஷ்வரன், சுபாஷ் ராஜ் சுருளி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments