தமிழகத்தில் புதிய தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் மேம்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்துவது குறித்த சில அறிவுரைகளை தலைமை மற்றும் மேலாண்மை இயக்குனர் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் மற்றும் நெடுஞ்சாலை துறை சார்ந்த பொறியாளர்களுக்கும் இயக்குனர் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் ஆகிய துறைகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
இக்கடிதத்தில்.. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைத்துறையில் சாலைகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளும்போது ஏற்கனவே உள்ள சாலையில் மட்டத்தினை உயர்த்துவதால் சாலையின் தன்மை ( நடைபாதை மற்றும் வடிகால் )முதலியவை பாதிக்கப்படுகிறது. மேலும் மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் சாலைகள் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக அடர்தளம் போடப்பட்டிருக்கும்.
ஆதலால் மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் சாலைகளில் மேலும் ஒரு அடர் தளம் போட்டு மட்டத்தை உயர்த்த வேண்டியது இல்லை. எனவே நெடுஞ்சாலைத் துறை மூலமாக மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளை பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளும் போது சாலைகளில் மேற்பரப்பை சுரண்டி எடுத்து விட்டு அதே அளவுக்கு மேல் தளம் அமைக்கும் வகையில் பின்வரும் வழிகாட்டு நெறிகளை தவறாமல் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளின் மேற்தளம் ஏற்கனவே போதுமான கனத்துடன் (Crust) கட்டமைக்கப்பட்டுள்ளது பிபிடி சோதனைகள் மேற்கொள்ள வேண்டியதில்லை.
எந்த சூழ்நிலையிலும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்பில் உள்ள சாலைகளில் மட்டம் அதிகரிக்கப்பட கூடாது.
சாலைகளின் மேல்தள கட்டுமானத்தை மட்டும் தேவைப்படும் கனத்திற்கு சுரண்டி எடுத்துவிட்டு (Milling) அதே அளவுக்கு மேற்தளம் இடவேண்டும் இது வீடுகளுக்குள் நீர் வருவதை தடுக்கும்.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளில் தார் தளத்திற்கு (BC) மட்டுமே அனுமதி அளிக்கப்படும். சாலை தார் மேல்தள கனமானது (thickness of BC) இந்திய. சாலை காங்கிரஸ் விதி 37 -2018 இன் படி சாலையில் போக்குவரத்து செறிவுக்கேற்ப மாறுபடும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
Comments