திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியின் நூலகநாள் விழா 01.06.2022 பிற்பகல் கொண்டாப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் முனைவர். சுரோஷ்குமார் நூலகர் தேசியக்கல்லூரி வரவேற்றார். மேலும் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன இணைய நூலகத்தைக் உருவாக்கி கொடுத்த செயலர், முதல்வர் ஆகியோருக்கு நன்றி பாராட்டி வரவேற்றார். நிகழ்விற்குத் தலைமையேற்ற கல்லூரி முதல்வர் முனைவர் R.சுந்தரராமன் நூலகத்தில் உள்ள வசதிகளை விளக்கினார். அதை மாணவர்கள் பயன்படுத்தும் படிக் கூறினார்.
நம் நூலகத்தில் உள்ள 1,25,000 நூல்களை புதிய தொழில் நுட்பத்துடன் இணைந்து மாணவர்களின் பயன்பாட்டை அதிகபடுத்த போட்டி தேர்வு மற்றும் தட்டச்சு பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கியதற்காவும். நூலகரையும் அவருக்கு உதவிபுரிந்த நூலக உதவியாளர்களையும் பாராட்டினார். “நூல் பிடித்து வாழ்க” என்ற தலைப்பில் நூலகநாள் விழாவில் உதவிபேராசிரியர் முனைவர் K. புவுனேஸ்வரி சிறப்புரையாற்றினார். கல்வியும் கல்வியறிவும் தமிழ்ச் சமூகத்தால் பெரிதும் மதித்துக் போற்றப்பட்டுள்ளன.
தமிழ்ச் சான்றோர்களாகிய திருவள்ளுவர். கம்பர், ஒளவையார் முதலியோர் அறிவற்றவர்களை, கல்லாதவர்களை மூடர்களாகச் சித்திரித்துள்ளனர். பிச்சை புகினும் கற்கை நன்றே என்றார் ஒளவையார் கல்வியறிவைப் பெருக்குவதில் நூலகங்கள் அறிவுத் திருக்கோயில்களாகச் செயல்படுகின்றன. நூல்கள் கல்வி அறிவை மட்டும் தராமல் மன அமைதி, மகிழ்ச்சி. மனநிறைவு, வளம் ஆகிய அனைத்தையும் பெறுவதற்கு உறுதுணைபுரிகின்றன. நூலகத்திலுள்ள நூல்கள் வழி மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையுடன் உரையை நிறைவு செய்தார்.
மிக அதிக அளவில் நூலகத்தை பயன்படுத்திய 45 மாணவர்களுக்கு செயலர்.கா. ரகுநாதன் பாராட்டி பரிசளித்தார். நிகழ்வில் பல்துறைப் பேராசிரியர்களும், மாணவர்களும் திராளகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நிறைவாகத் முன்னால் நூலகர் முனைவர். ராகவன் பாராட்டு உரையில் மாணவர்கள் பயன்பாட்டிற்காக புதிய நூல்கள் புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தி கொடுத்த நிர்வாகத்தையும் அதை நன்றாகப் பயன்படுத்தி பரிசு பெற்ற மாணவச் செல்வங்களையும் பாராட்டி நன்றி கூறினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments