Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி தேசிய கல்லூரியில் நூலக வேலைவாய்ப்பு பயிற்சி – கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்!!

Advertisement

திருச்சி தேசியக்கல்லூரியின் நூலகத்துறை சார்பாக “நூலக வேலைவாய்ப்புப் பயிற்சிப் பட்டறை” நடைபெற்றது. ஒரு மாதம் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் பங்கு பெற்றவர்களுக்கு நிறைவு விழாவாக இன்று மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.

Advertisement

இந்த பட்டறையில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் முதுநிலை நூலகம் மற்றும் தகவியல் துறை மாணவர்கள் 8 பேர் இப்பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்றனர். இதில் நூலக மேலாண்மை, நூலகப் பகுப்பாய்வு, நூலக செயல்பாடு, நூலக புதிய உத்திகள் குறித்து இப்பயிற்சியில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது.

ஒரு மாத காலம் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் கல்லூரியின் துணை முதல்வர் பெனட் “பல்கலைக்கழக மானியக்குழு தேர்வு விழிப்புணர்வு” என்ற தலைப்பிலும், முன்னாள் நூலகவியல் துறைத் தலைவர் முனைவர் இராகவன் “நூலக மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு” என்ற பொருளிலும், பேராசிரியர் இராமஜெயம் புள்ளியியல் தகவல்கள் குறித்தும் மாணவர்களுக்கு சிறப்பாக நடத்தினர்.

Advertisement

இப்பயிற்சியில் நிறைவு விழா இன்று திருச்சி தேசிய கல்லூரி நூலக அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் தேசிய கல்லூரி செயலாளர் ரகுநாதன், கல்லூரி முதல்வர் சுந்தரராமன், கல்லூரி நூலகத் துறை தலைவர் சுரேஷ்குமார், வணிகவியல் துறை தலைவர் குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் பயிற்சி பங்கு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *