கடந்த (09.04.2019)-ந் தேதி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்தும், புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வழக்கின் எதிரியான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) த.பெ.அறிவழகன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, கடந்த (03.06.2019)-ந் தேதி மேற்படி எதிரி மணிகண்டன் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். மேற்படி வழக்கில் திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றத்தால் நேற்று (24.06.2024)-ம் தேதி, மேற்படி எதிரி மணிகண்டன் என்பவருக்கு (Imprisonment for Life till remainder of his natural life எஞ்சியிருக்கும் வாழ்நாள் முழுவதும் ஆயுள் சிறை) மற்றும் ரூ.25,000/- அபராதம் விதித்தும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைதண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5,00,000/- இழப்பீடுத்தொகை வழங்கவேண்டும் என மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவட்சன் இத்தீர்ப்பினை வழங்கினார்.
அரசு வழக்கறிஞர் ஜாகீர் உசேன் அரசு தரப்புக்காக ஆஜராகி வாதாடினார்கள். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர் படுத்திய அப்போதைய பொன்மலை அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் காவேரி மற்றும் மும்தாஜ் பேகம்,
மேலும் புலன் விசாரணையில் உறுதுணையாக இருந்த தற்போதைய அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர், காவல் ஆளிநர்கள் மற்றும் நீதிமன்ற பணிபுரிந்த காவல் ஆளிநர்களையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, வெகுவாக பாரட்டினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments