கடந்த (11.7.2023) அன்று திருச்சி நெடுந்திரு கொள்ளிடம் ஆற்றின் படித்துறைக்கு வடக்கே ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டு பள்ளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்து சம்பந்தமாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் கடந்த (13.07.2023) ஆம் தேதி திருச்சி மாவட்டம் கல்லக்குடியை சேர்ந்த நாகராஜ் (53) என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். இறந்து கிடந்த லால்குடியை சேர்ந்த கலைச்செல்வி (35) என்பவருக்கும் நாகராஜனுக்கும் நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது. கலைச்செல்வியின் கணவர் இறந்த பிறகு இருவருக்குமான நெருக்கம் அதிகரித்துள்ளது. மேலும் நாகராஜன் உல்லாசத்துக்கு வருமாறு இறந்து போன கலைச்செல்வியை அழைத்துள்ளார்.
ஆனால் கலைச்செல்வி இதற்கு மறுத்துள்ளார். தொடர்ந்து வற்புறுத்திய நாகராஜன், ஒருமுறை மட்டும் என்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டுமென கட்டாயப்படுத்தி உள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்து வந்த கலைச்செல்வியை கொலை செய்துவிட வேண்டுமென ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் திட்டிருக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுவித்துவிட்டு இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளார்.
இவ்வழக்கானது மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் விசாரணை முடிந்து வழக்கின் எதிரியான நாகராஜனுக்கு வாழ்நாள் (ஆயுள்) சிறை 10,000 அபராதம், ஏழு வருடம் சிறை தண்டனை 5,000 அபராதம் கட்ட தவறினால் ஒன்பது மாதம் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments