திருச்சி கூத்தூர் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கான 13வது ஒளி ஏற்றும் விழா பள்ளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் கோபிநாதன் முன்னிலையில் மாணவர்களுக்கு விளக்கு ஒளியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் திருச்சியில் இயங்கி வரும் ராந மருத்துவமனையின் தலைமை இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் செந்தில்குமார் நல்லுசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இவர் மாணவர் நலன் கருதி வாழ்விற்கு தேவையான குறிப்புகள் பலவற்றை வழங்கினார்.
மேலும் பள்ளியின் அறங்காவலர் லட்சுமி பிரபா, இயக்குனர் வரதராசன், ஆலோசகர் மலர்விழி, முதல்வர் தயானந்தன், துணை முதல்வர் சுஜாதா மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். இறுதியில் நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments