Thursday, September 25, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஊரக உள்ளாட்சி தேர்தல் 4 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் – திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

2021 ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல் அக்டோபா் 09ம் தேதி அன்று நடைபெறவுள்ளதால் 07.10.2021 முற்பகல் 10.00 மணி முதல் அக்டோபர் 
09ம் தேதி இரவு 12.00 மணி வரையிலும், 12.10.2021 அன்று வாக்குப் பதிவு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் முழுவதும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் போசம்பட்டி, நாகமங்கலம், பழங்கனாங்குடி, கீழக்குறிச்சி, கே.பெரியபட்டி, சீகம்பட்டி, 
தேனூர், தேத்தூர், கொடும்பப்பட்டி, கொன்னைக்குடி, ஜெயக்கொண்டான், 
பயித்தாம்பாறை, தும்பலம், எம்.களத்தூர், கொணலை, ஓமாந்தூர், ஸ்ரீராமசமுத்திரம், 

பைத்தம்பாறை, சேனப்பநல்லூர், ஆங்கியம், சிறுமருதூர் வடக்கு, சிறுமருதூர் தெற்கு, கீழரசூர் வடக்கு, கீழரசூர் மேற்கு மற்றும் வையம்பட்டி, மருங்காபுர்p, 
துறையூர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் 
இடங்கள் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் 
கடைகளும் மூடப்பட்டிருக்கும், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் (FL2 முதல் FL11 (FL-6 தவிர) அக்டோபர் 07 முற்பகல் 10.00 மணி முதல் அக்டோபர் 09 இரவு 12.00 வரையிலும் மற்றும் அக்டோபர் 12 அன்றைய நாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் உள்ள மதுபானக் கடைகள் முழுவதும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்.

மேலும், அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *