Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்த பக்தர் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் பல்லி

தஞ்சாவூர் மாவட்டம் கீழ வீதி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (56), ராஜலட்சுமி (49) தம்பதி. இவர்கள்  மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் என குடும்பத்தோடு நேற்று இரவு சமயபுரம் வந்த பழனிச்சாமி இரவு தங்கிவிட்டு இன்று காலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு  நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக வந்து மொட்டை அடித்து விட்டு மாரியம்மனை தரிசிப்பதற்காக பொது தரிசனத்தில் வரிசையில் நின்று வந்துகொண்டிருந்தார்.

அப்போது பேத்தி தாத்தாவிடம்  தாகமா இருக்கிறது தண்ணீர் வாங்கித் தாருங்கள் என தாத்தாவிடம் கேட்டதற்கு அப்பகுதியில் இளைஞர் ஒருவர் விற்றுக் கொண்டிருந்த ஆசை என்ற பெயர் கொண்ட வாட்டர் பாட்டிலை  வாங்கியுள்ளார் பழனிச்சாமி. மூடியைத் திறந்து பார்த்தபோது அதில் பல்லி இறந்து  கிடப்பதை அறிந்து அதிர்ச்சியுற்றார்.

பின்னர் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்த வாலிபரிடம் என்னப்பா பல்லி கிடக்கிறது என கேட்டதற்கு அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி  ஓட்டம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து பல்லி கிடந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு பழனிச்சாமி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.

சமயபுரம் போலீசார் புகாரை வாங்க மறுத்து நுகர்வோர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடுமாறு போலீசார் தெரிவித்தனர்.  இதனை தொடர்ந்து  தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு வழக்கு தொடர சென்றார் பழனிச்சாமி.

ஒருவேளை கவனிக்காமல் தண்ணீரை குடித்து இருந்தால்  உயிர்பலி ஏற்பட்டு இருக்குமோ என கோவிலுக்கு வந்த பக்தர்கள் அச்சம் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *