Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பழச்சாற்றில் பல்லி -அருந்தியவர் அரசு மருத்துவமனையில் அனுமதி- பரபரப்பு.

ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாக கட்டிடத்தில் இயங்கி வரும் பழச்சாறு கடையில் உறையூரை சேர்ந்த சுதர்சன் என்பவர் பழச்சாறு அருந்தியுள்ளார்.அப்போது பழச்சாற்றில் பல்லி இருந்தது கண்டறிந்தவர் உடனடியாக காவல் நிலையத்துக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

தற்போது அவர் முதலுதவி சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . உணவு பாதுகாப்புத்துறை மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் பழக்கடையில் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். அங்கு உள்ள பழங்கள் அழுகிய நிலையில் இருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்தது.

கடையிலிருந்து அழுகிய பழங்கள் அழிக்கப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை  அதிகாரிகள் இரண்டு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தனர். ஜூஸ் ஏழுநூறு என்பது கடையின் பெயர் 700ml பழச்சாறு 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *