தூத்துக்குடியில் இருந்து கடலூருக்கு உரம் ஏற்றி சென்ற கங்கா லாரி சர்வீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி கட்டுப்பாட்டை இழந்து திருச்சி சஞ்சீவி நகர் பேருந்து நிலைய நிழற்குடையை உடைத்து நொருக்கியது. மேலும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த 20 அடி பள்ளத்தில், உரம் மூட்டைகளுடன் லாரி பக்கவாட்டில் சாய்ந்தது.
லாரியை ஓட்டிவந்தபோது ஓட்டுநர் இன்று அதிகாலை 4 மணியளவில் கண்ணயர்ந்ததே இந்த விபத்துக்கு காராணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அர்ஜுன் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜேசிபி ரோப் இயந்திரத்தின் உதவியுடன் லாரியை மீண்டும் சாலையில் நிலை நிறுத்தினர். 20 அடி பள்ளத்தில் சரிந்து கிடந்த உர மூட்டைகளை அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த விபத்தில் பேருந்து நிழற்குடையில் அமர்ந்திருந்த ஒருவர் உரம் மூட்டைகளுக்கு நடுவே சிக்கியிருந்தார். அவரை தீயணைப்பு மீட்பு படையினர் நீண்ட போராட்டத்திற்கு மீட்டனர். இதனையடுத்து திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார் லாரி ஓட்டுநர் அர்ஜுனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments