திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் உதவி காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
Advertisement
அப்போது சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்த பாலசுப்ரமணி(52) வீரமலை(29) திருமலை(50) இளங்கோவன்(52) மாணிக்கம்(53) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 லட்சத்து 2 ஆயிரத்து 260 ரூபாய், மூன்று இருசக்கர வாகனங்கள், 4 செல்போன்கள் மற்றும் 13 நம்பர் ஒன் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Advertisement
மேலும் இதுகுறித்து பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை. இதுவரை சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 80 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Comments