திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஏரி மெஷின் தெருவில் வசித்து வந்தவர் காயத்ரி( வயது 27) திருநங்கையான இவர் தனியே வீடு எடுத்து வசித்து வந்த அதே தெருவிலேயே அவருடைய தந்தை ஜோதி வசித்து வருகிறார். இருவருக்கும் பேச்சு, வார்த்தை இல்லை என கூறப்படுகிறது.
Advertisement
இந்நிலையில் காயத்ரி இன்று அதிகாலை வீட்டில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது குறித்து அவருடன் தங்கி உள்ள சக திருநங்கைகளிடம் விசாரணை மேற்கொண்டபோது, காயத்ரி அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும் ஆயினும் அந்த வாலிபர், காயத்ரியை திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறி விட்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டதால், மனமுடைந்த காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
Advertisement
Comments