திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி ஐயப்பன் நகரை சேர்ந்தவர் பிரவீன் குமார் (30). இவர் லாரி கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த டிப்ளமோ நர்சிங் முடித்த வீரம்மாள் (25) என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து உள்ளார். இருவரும் இரு வேறு சமூகத்தினர் என்பதால் பெண்ணின் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதையும் மீறி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீரம்மாலை பிரவீன் குமார் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் இவர்களுக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இதனை தொடர்ந்து பிரவீன் குமாருக்கும், வீரமாலுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மாலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இது சம்பந்தமாக வீரமா மாலின் தம்பிக்கு பிரவீன் குமார் தகவல் தெரிவித்ததாகவும் அதன் அடிப்படையில் வீரம்மாள் தம்பி இருவருக்கும் வந்து சமரசம் பேசி விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இன்று காலை பிரவீன் குமார், வீரம்மாள் தம்பிக்கு போன் செய்து மீண்டும் வீட்டில் தனக்கும் வீரமாலுக்கும் இடையே தகராறு என்று கூறியதாகவும் அதன் அடிப்படையில் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது வீரம்மாள் சுயநினைவு இல்லாமல் கிடந்ததாகவும் உடனடியாக அவரை துவாக்குடிய அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்று பரிசோதித்த போது வீரம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இது சம்பந்தமாக வீரம்மாளின் குடும்பத்தினர் வீரம்மாளை பிரவீன் குமார் அடித்து கொலை விட்டதாகவும், அதற்கு உறுதுணையாக அவனது தம்பி மற்றும் தந்தை உள்ளதாக கூறி துவாக்குடி காவல் நிலையம் முன்பு அவரது குடும்பத்தினர் திறண்டு பிரவீன் குமார் மற்றும் அவரது தம்பி தந்தை உள்ளிட்டோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் விசாரணை செய்து வருவதோடு திருமணம் ஆகிய மூன்று ஆண்டுகளே ஆவதால் திருச்சி ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments