Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

துப்பாக்கி தொழிற்சாலையில் “கோவிட் போர் பிரிவை” தொடங்கிய பாதுகாப்பு அதிகாரி லெப்டினட் கர்னல் கே.கார்த்திக்கேஷ்

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கொரானா தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. அவர்களுடைய மருத்துவமனையை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு குழு அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது பாதுகாப்பு அதிகாரி லெப்டினட் கர்னல் கே.கார்த்திக்கேஷ் தனது சொந்த முயற்சியில் “கோவிட் போர் பிரிவை” துவங்கியுள்ளார். இரண்டு தரைவழி தொலைபேசி மற்றும் ஒரு செல்போன் என்னும் தொழிற்சாலை நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டுள்ளது. அக்குழு பாதுகாப்பு அதிகாரியின் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. மாநில சுகாதாரத் துறையின் கீழ் 83 மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. 

மருத்துவமனைகளுக்குச் சென்று பார்வையிட்டு மருத்துவமனை அதிகாரிகள் குழுவின் தொலைபேசியிலேயே தொடர்பில் இருக்கும் அளவு சமூக உறவை வளர்த்துக் கொள்ளும் வகையில் அவர்களுடன் பேசி வருகிறார். ஒவ்வொரு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அனுமதி வாங்குவதற்கு மூன்றரை மணி நேரம் தேவைப்பட்டது. நோயாளிகளுக்கு 30 முதல் 35 மருத்துவமனைகள் இடத்தை உறுதிப்படுத்த வேண்டி இருந்தது ஒரு வாரத்திலேயே பாதுகாப்பு அதிகாரியின் அர்ப்பணிப்போடு ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இச்செய்தி அருகில் உள்ள கிராம மக்களுக்கு பரவியது அவர்களும் குரமோர் பிரிவு தொடர்பு கொண்டு உதவி கோரினார் அவர்களுக்கு உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். 

பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தினரை அழைத்து பேசிடும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அது குறித்த விபரங்கள் தினமும் பொது மேலாளர் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் அளிக்கப்பட்டது பணிச்சுமை காரணமாக வேறு மருத்துவமனைக்கு மாறிட விரும்பிய நோயாளிகளுக்கும் உடனடியாக அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. மூன்று வாரங்களில் 48 பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 16 பேர் பல்வேறு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வாழவந்தான் கோட்டை மற்றும் பெரம்பலூர் போன்ற ஊர்களில் இருந்தும் அழைப்புகள் வந்தன. அக்குழுவில் குறிப்பிட்ட நபர்களை இடம்பெற்றன. மகேந்திரன், சுதிஷ், ஸ்டீபன், தினேஷ் சக்திவேல் மணிகண்டன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பணி செய்கின்றனர். 

இதுபோன்றதொரு   முயற்சியை பணியாளர்கள் பாராட்டுகிறார்கள் பாதுகாப்பு அதிகாரி தானாகவே சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட தலைமையகத்தை தொடர்பு கொண்டு துப்பாக்கி தொழிற்சாலை பணியாளர்களுக்கு செலுத்த வேண்டிய நோய் தடுப்பூசி தேவை குறித்து பேசினார் அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதிகாரி தொடர்ந்து கண்காணித்து தொழிற்சாலைக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதை உறுதி செய்தார் அவர் சமூக வலைதளங்கள் மற்றும் தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பணியாளர்கள் தடுப்புச் எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தினார் இந்த வளாகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை உயர்த்த உதவியது. இதுவரை வளாகத்தில் 2000 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

அனைத்து கூட்டங்களும் ஆய்வாளர் JWM பாலாஜி மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முயற்சி துப்பாக்கி தொழிற்சாலை சமூக மற்றும் மனித நேயத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பாதுகாப்பு அதிகாரி இந்த முயற்சி 64 உயிர்களை காப்பாற்றி உள்ளது. இதன் மூலம் துப்பாக்கி தொழிற்சாலை பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உணருகிறார்கள். மற்ற மத்திய அரசு நிறுவனங்களுக்கும் இதனை பின்பற்றி தங்களின் பணியாளர்களை பாதுகாக்கவேண்டும்.

துப்பாக்கி தொழிற்சாலை வரலாற்றில் இவரது சேவைகள் என்றும் இடம்பெறும். பாதுகாப்பு அதிகாரியின் இந்த முயற்சியால் இந்திய ராணுவத்தினர் மீது திருச்சி மாவட்ட மக்கள் தொழிற்சாலை பணியாளர் ஆகியோரிடையே பெரும் மரியாதையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்களை துப்பாக்கி தொழிற்சாலையில் கூட்டு நடவடிக்கை குழு பாராட்டுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *