திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ரயிலடி பக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் இன்று மஹா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவானது, கடந்த 22ம் தேதி அனுக்ஞை, தன பூஜை, விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து காவேரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு முதலாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓதப்பட்டு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக இன்று கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏனைய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Comments