108 திவ்ய தேசங்களில் 4வது தேசமான பிரசித்தி பெற்ற அன்பில் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் – ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
108 திவ்ய தேசங்களில் 4வது திவ்ய தேசமான 12 ஆழ்வார்களில் ஒருவரான பக்தி சாரர் என்னும் திருமலிசை ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து திருஅன்பில் என்னும் திவ்ய தேசத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சுந்தரவல்லி நாயகி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

இக்கோவிலில் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் கடந்த 1ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை கஜ பூஜையுடன் யாகசாலையில் பூஜைகள் தொடங்கின.தொடர்ந்து இரண்டாம் தேதி காவிரியில் இருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டுவரப்பட்டது யாக சாலையில் வைத்து துவார பூஜை, கும்ப, மண்டல, பிம்ப , அக்னி சதுர்த்தன ஆராதனம் பூஜைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 5 மணி அளவில் யாகசாலையில் உற்சவர் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி வேத விற்பனர்கள் வேதம் மந்திரங்கள் முழங்க 7 மணி அளவில் மகா பூரண ஹதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மேல தாளங்களுடன் கும்பங்கள் புறப்பட்டு 8 மணி அளவில் கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். மேலும் கோயிலை சுற்றி அன்னதானங்களும் வழங்கப்பட்டன.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
13 Jun, 2025
389
04 May, 2025







Comments