Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கடந்த ஆட்சியில் சம்மட்டியால் அடித்து உடைத்ததால் காவிரி பால  பராமரிப்பு பணிகள் தாமதம் – திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி மதுரை நெடுஞ்சாலையில்
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் பல்வகைப் பயன்பாட்டு மையம் சுமார் 349.98 கோடி மதீப்பீடில் கட்டுமானப் பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று  பஞ்சப்பூரில் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு…… பஞ்சப்பூரில் இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மொத்த மதீப்பீடு 349.98 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது. அடுத்த ஒரே ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும. அடுத்த நவம்பரில் பயன்பாட்டிற்கு வரும்.

அண்ணா சாலை முதல் ஜங்சன் வரை 966 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. டெண்டர் விடும் பணிகள் இனி நடைபெற்று உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் துவங்கும். நகர்பகுதிகளில் சாலை அமைக்கும் திட்டம் மழையின் காரணமாக சில இடங்களில் தாமதம் ஏற்படுவது உண்மை தான்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மழை வெள்ளம் வந்தவுடன் திமுகவின் சாயம் வெளுக்கும் என பேசி வருவது குறித்த கேள்விக்கு….. 5000 கோடிக்கு மேல் வெள்ள தடுப்பு  பணிகளை மேற்கொண்டு வருகிறோம். திமுகவின் சாயமெல்லாம் வெளுக்காது. சாயம் போகாத கட்சி தான் திமுக. புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பல்வேறு பயன்பாட்டு மையம் கனரக சரக்கு வாகனம் முனையம் ஓராண்டிற்குள் இப்பணிகள் முடிவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி காவிரி பல பணிகள் தாமதமாவதற்கு கடந்த காலத்தில் பாலத்தை சம்மட்டியால் வைத்து அடித்து உடைத்து விட்டனர் ஆகவே தாமதம் . மூன்று மாத காலத்தில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *