Monday, September 22, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கோடீஸ்வரனாக்குகிறேன் – குட்டி சாத்தான் ஏவி கொலை – போலி மந்திரவாதியின் தில்லாங்கடி!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் நேறது காலை 11.00 மணிக்கு அமர்ந்திருந்த திருவெறும்பூர் மலை கோவில் மாரியம்மன் கோவில் தெருவிச்சந்த மாணிக்கம் மகன் சதீஸ்பாபு ( 31) என்பவரிடம் சென்னை திருவல்லிக்கேணி நடுக்குப்பம் நாலாவது தெருவை சேர்ந்த ரகு (45) தான் ஒரு மலையாளி என்றும், எனது சொந்த மாநிலம் கேரளா எனவும், ஜோசியம் மற்றும் மாந்திரிகம் பூஜை செய்வதில் கைதேர்ந்தவர் எனவும்,

உன்னை ஒரு வாரத்தில் கோடீஸ்வரனாக்குகிறேன் வரும் பஞ்சாயத்து தேர்தலில் கவுன்சிலராக்குகிறேன் எனவும் கூறி pappalyvishnumaya என்ற யூடியூப் சேனலுக்கு சென்று மாந்திரீகம் சம்மந்தமான நிறைய வீடியோக்களை காண்பித்து சதீஸ்பாபுவிடம் முன்பணமாக ரூ.3000/- பணத்தை பெற்று அருகில் உள்ள கோவிலுக்கு சென்று மாந்திரீகம் செய்துவிட்டு 1 மணி நேரத்தில் வருகிறேன் என கூறி சென்றுள்ளான்.

 இந்நிலையில் ஒரு மணி நேரம் ஆகியும் திரும்பி வராததினால் சதீஸ்பாபு மலைக்கோவில் பகுதியில் சென்று தேடிய போது, அங்கு மற்றொருவரிடம் அதேபோல் கூறி பணம் பெற முயற்சி செய்து கொண்டிருந்தபோது, சதீஸ்பாபு சென்று ஏன் ஏமாற்றி பண மோசடி செய்து கொண்டிருக்கிறாய் என கேட்டபோது, நான் கேரளாவை சேர்ந்து மாந்திரீகன் எனவும், உன்னை மாந்திரீகம் செய்து கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளான்

இது சம்மந்தமாக சதீஸ்பாபு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண். 8939146100-ற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததன் பேரில், திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உத்தரவின் பேரில் எஸ்.பி செல்வநாகரத்தினம் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் தனிப்படை அமைத்து மாந்திரீகம் செய்த ரகுவை கைது செய்து நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சியில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவரது சமூக வலைதள பக்கங்களில் ஏராளமான வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதில் ஒருவர் சொல்லும் எதிரி ஆட்களை மாந்திரீகம் மூலம் குட்டிச்சாத்தான் ஏவி கொலை செய்ய வைப்பதற்கு 10 முதல் 20 லட்சம் வரை பணம் பெறுவதாவும், குறிப்பாக தற்போது பதவியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவரை மரணம் அடைய செய்து வேறொருவரை அந்த பதவியில் அமர வைப்பதற்கு பணம் பெற்றுக் கொண்டு மாந்திரிகம் செய்வதாகவும்,

அதேபோல் வெளிநாட்டில் உணவகம் நடத்தி வரும் ஒருவருக்கு தொழில் வளத்தை பெருக்கி போட்டியாக உள்ள மற்றொரு கடை உரிமையாளரை அரண்மனை செய்வதற்கு பணம் பெற்று பூஜை செய்வதாகவும், இதுமட்டுமின்றி பெண்ணை ஏமாற்றிய இளைஞரை கொலை செய்வதற்கு நள்ளிரவில் பூஜை செய்வதாகவும் இதற்கு ஜீபே மூலம் பணம் பெற்றுக் கொண்டு பில்லி சூனியம் ஏவல்களை ஏவி அவரை மரணம் அடைய செய்ய வைப்பதாக கூறி பல வீடியோக்களை பதிவேற்றம் செய்து உள்ளார்.

இதுபோன்று பல்வேறு சித்து விளையாட்டுக்கள் மூலம் பொது மக்களை ஏமாற்றி லட்ச கணக்கில் பணம் பறிக்கும் இந்த மாந்திரிகள் தன்னை ஓர் இறைவன் அனுப்பிய அவதாரம் என்று நினைத்துக் கொண்டு, பொதுமக்களிடம் கற்பனைக்கு எட்டாத பல கட்டுக் கதைகளை கூறி ஏமாற்றி லட்ச கணக்கில் பணம் சம்பாதிப்பதை தொழிலாக செய்து வருகிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *