திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருவளர்ச்சோலை காவிரி ஆற்றில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் எலும்பு கூடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்து ஒரு மாதத்திற்கு மேலாகி இருக்கும் என்று கூறப்படுகிறது.
அங்கு உள்ள நாய்கள் உடலை கடித்துத் தின்றுள்ளதாக கூறப்படுகிறது. இறந்தவர் யார் எப்படி இறந்தார் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் ஸ்ரீரங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்ட உடல் எல்லையானது திருவரம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்று ஸ்ரீரங்கம் காவல் நிலையம் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.
தற்போது தான் இது ஸ்ரீரங்கம் எல்லைக்குட்பட்டது என்று மேலிடம் அறிவித்தவுடன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments