திருச்சி மாநகர அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள டீ கடையில் வேலை செய்யும் நபரிடம் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாம் என்பவர் தான் ஒரு போலீஸ்காரர் என அறிமுகம் செய்துகொண்டு
காவல்துறையினரால் ஏலத்தில் விடப்படும் இருசக்கர வாகனத்தை குறைந்த விலையில் ஏலம் எடுத்து தருவதாக கூறி ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டும் வாகனத்தை வாங்கி தராமலும் பணத்தை திரும்ப தராமலும் இருப்பதாக மோசடி செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பொழுது
தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறி புகார்தாரரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டதை ஒப்புக்கொண்டதன் பேரில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
திருச்சி மாநகரில் பொதுமக்கள் இதுபோன்று. கூறுபவரிடம் ஏமாற வேண்டாம் எனவும் தமிழக காவல்துறையில் பணியாற்றுவதாக கூறி குற்ற சம்பவங்கள் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் நா.காமினி அவர்கள் தெரிவித்துள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments