திருவெறும்பூர் அருகே காட்டூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (42). இவர் டோல்பிளாசா பகுதியில் டாஸ்மாக் மதூபான கடை பாரில் சப்ளையராக உள்ளார்.இந்நிலையில், இவர் கடையிலிருந்தபோது
அவரிடம் வந்த வாழவந்தான்கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விமல் என்பவர் சரக்கு கேட்டதற்கு, “இல்லை. இங்கு விற்பதில்லை கடை திறந்ததும் வாங்கிக் கொள்ளுங்கள்” – என்று கூறியதாகவும், அதற்கு கணேசனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி விமல் ரூ 750பணத்தைப் பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கணேசன்துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் அடிப்படையில் துவாக்குடி சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விமலை (34) என்பவனை கைதுசெய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments