கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபரை கைது – கள்ள நோட்டு அச்சிடுவதற்கு பயன்படுத்தபட்ட பொருட்கள் பறிமுதல்
திருச்சி மாவட்டம் மருதாண்டாக்குறிச்சி, ஆளவந்தான் நல்லூர் பகுதியில் வசித்து வரும் அனி பவுல்ராஜ் 50 என்பவர் மருத்துவ பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார்.பணத்தின் மீது உள்ள ஆசையின் காரணமாக தாமாகவே பணத்தை அச்சிட்டு கடந்த சில மாதங்களாக பணத்தை புழக்கத்தில் விட்டு வந்துள்ளார்.
இதன் காரணமாக அவரது தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடைந்துள்ளது. வேலைக்கு ஏதும் செல்லாமல் பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விட்டால் ஆடம்பரமாக வாழலாம் என்ற நோக்கில் கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு செலவு செய்து வந்துள்ளார்.
கள்ள நோட்டு புழக்கம் அப்பகுதி மற்றும் மாநகர பகுதிகளில் பரவி வருவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண்ணிற்கு வந்த தகவலின்படி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் வேலழகன், காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை கடந்த ஒரு வார காலமாக கண்காணித்து வந்த நிலையில் இன்று ஆளவந்தான் நல்லூர், மேட்டு தெரு பகுதியில் தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து வந்தபோது, அவர்
இரு சக்கர வாகனத்தில் ஒரு பையில் கள்ள நோட்டுகளை வைத்து தனது வீட்டிலிருந்து வெளியே வரும்பொழுது மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டபோது அவர் சட்டை பையில் நான்கு 500 ரூபாய் கள்ள நோட்டுகளும், கைப்பையில் நோட்டுகள் வைத்திருந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து கலர் பிரிண்டர் , ஸ்மார்ட் போன், இங்க் பாட்டில்கள் ,வங்கி கணக்கு புத்தகம் ,வெள்ளை பேப்பர்கள் பிரித்த நிலையில் ,கட்டிங்க எடுக்கப்பட்ட கள்ள நோட்டுகள்- பாதி வெள்ளை தாளில் வெட்டப்படாமல் உள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள்-48, முழு வெள்ளை தாளில் அச்சிடப்பட்டு வெட்டப்படாமல் உள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள்-17 ,அசல் ரூபாய் நோட்டுகள் -11, இரும்பு ஸ்கேல்கள் 11) பேப்பர் வெட்டும் கத்திகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மல்லியம்பத்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் இன்று சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படவுள்ளார்.இது போன்று போலியான கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடக்கூடியவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபடுவதாக தெரிய வந்தால்,
உடனடியாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண்னுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடுப்போரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments