திருவெறும்பூர் அருகே தனியார் நிறுவன ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து வைத்து மிரட்டி வந்த தனியார் நிறுவன ஊழியரை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து இருந்தனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள ஜெய் நகரை சேர்ந்தவர் கணேஷ் இவர் தனியார் நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி இந்த நிலையில் அதே தனியார் நிறுவனத்தில்வேலை பார்க்கும் திருவேங்கட நகரை சேர்ந்த தனக்கொடி மகன் முத்துக்குமார் (38) இவன் வெல்டர் ஆக வேலை பார்த்து வருகிறான்.
இந்நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது இதனால் ஒரு குடும்பத்தினர் மற்ற குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி வந்து செல்வதும் இருந்து வந்துள்ளது.இப்படி நட்பாக பழகி வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுஷாளம் கணேஷ் தனது நண்பர்வீட்டிற்கு சென்றிருந்த பொழுது அவரது மனைவிக்கு மில்க் ஷேக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.
அதில் மயங்கிய நண்பரின் மனைவியை ஆபாசமாக தனது செல்போனில் முத்துக்குமார் படம் மற்றும் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் அதனை வைத்து முத்துக்குமார் மிரட்டி வந்ததாகவும் இது சம்பந்தமாக அந்தப் பெண் திருச்சி எஸ் பி செல்வ நாகரத்தினத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.அதன் அடிப்படையில் செல்வநாகரத்தினம் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்து விசரனை செய்தப போது முத்துக்குமார் ஏற்கனவே ஒருபெண்ணை இதுபோல் புகைப்படம் எடுத்து மிரட்டி வந்ததும் அது பிரச்சனையானதும் பேசி முடித்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் முத்துக்குமார் இதுப்போல் பல பெண்களை தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதாகவும் ஆனால் அது சம்பந்தமாக எந்த வித புகார் வராததால் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இந்த வழக்கில் மட்டும் முத்துக்குமாரை கைது
செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆதரவு படுத்தியில் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments