திருச்சிராப்பள்ளி மாவட்டம் கம்பரசம்பேட்டை வெள்ளாளர் தெருவில் வசித்து வரும் சீனி முகமது வயது 45 என்பவர் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நபர்களிடம் நச்சுத்தன்மை
உடைய புகையிலை பொருட்களை கொடுத்து விற்பனை செய்து செய்த செய்ய கடந்த 17/03/ 2025-ஆம் தேதி நபர் கோப்பு பாலம் அருகே எடுத்துச் சென்றபோது காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்த 43 கிலோ நச்சுத்தன்மை உள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.இது தொடர்பாக சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில்
வழக்கு பதிவு செய்யப்பட்டது வழக்கில் சீனி முகம்மதுவை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட தற்போது சிறையில் இருந்து வருகிறார்.சீனி முகமது என்பவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செ. செல்வரத்தினம் அவர்கள் பரிந்துரைத்துதன்
பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இன்று (10/04/2025)-ம் தேதி ச சிறையில் சார்வு செய்யப்பட்டது. மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 2025 முதல் இதுவரை மொத்தம் 19 தடுப்பு காவல் அஆணை பிறப்பிக்கப்பட்டு சார்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments