திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூர் பழனியாண்டி மகன் சரவணன் என்பவர் கடந்த (20/03/ 2025)-ஆம் தேதி காலை 7:00 மணிக்கு தனது தோட்டத்திற்கு செல்வதாக வலையூர் ஆர்ச் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அங்கு மறைந்து நின்ற
கொண்டிருந்த கல்பாளையம் தெற்கு தெருவை சவேரியார் மகன் ஸ்டீபன் ஆரோக்கியராஜ் என்பவர் மது அருந்துவதற்காக சரவணன் என்பவரிடம் பணம் கேட்டபோது தர மறுத்ததால் குற்றவாளி ஸ்டீபன் ஆரோக்கியராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சரவணன் இடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு இதை யாரிடமாவது கூறினால் உன்னை கொலை
செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து ஓடி விட்டதாக புகார் கொடுத்தார்.சிறுகனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வழக்கில் ஸ்டீபன் ஆரோக்கியராஜ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்டீபன் ஆரோக்கியராஜ் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வரத்தினம் அவர்கள் பரிந்துரைத்ததின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் வழக்கில் ஸ்டீபன் ஆரோக்கியராஜ் மீது தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு
இன்று 10 /04/ 2025ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 2025 முதல் இதுவரை மொத்தம் 20 பேர் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments