திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கீழ பொகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் ( 30 ) கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கல்பனா என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் புதிதாக அவரது ஊரில் வீடு கட்டி வருகிறார். வீட்டில் கொத்தனார் வேலை செய்துகொண்டுயிருக்கும்போது வீட்டின் அருகில் உள்ள மின் மோட்டரை போடுவதர்க்கு சுட்ஸ்சை அளித்திய போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
அருகில் இருந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிந்துஜா மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர்கள் பரிசோதித்ததில் இறந்துவிட்டர் என கூறி உள்ளனர். பின்னர் அங்கிருந்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டு உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments