Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ஜங்ஷன் இரயில்வே சந்திப்பில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

கடந்த 23.07.22-ந்தேதி காலை திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு அலுவலக வாட்ஸ்அப் அலைபேசி எண்ணிற்கு 7339499271 என்ற எண்ணிலிருந்து, ‘நான் மனித வெடிகுண்டு, இன்னைக்கு திருச்சி இரயில்வே ஸ்டேஷன்ல வெடிகுண்டு வைக்க போறேண்டா முடிஞ்சா காப்பாத்து என்ற வாசகங்கள் அடங்கிய குறுந்தகவல் ஒன்றும், அதனுடன் ஆபாச வீடியோ ஒன்றும் வந்தது.

இதனை தொடர்ந்து, பணியில் இருந்து முதல்நிலை காவலர், உயரதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்று, கே.கே.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், வழக்கு செய்யப்பட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து மாநகர சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன், அந்த நபரின் அலைபேசி எண்ணின் விபரங்களை சேகரித்து தொடர்ந்து விசாரணை செய்தபோது, புதுக்கோட்டை மாவட்டம், குழிப்பறை, திருவள்ளுவர் நகரில் உள்ள அலைபேசி எண்ணில் இருந்து மேற்கண்ட அச்சுறுத்தல் வந்ததை அறிந்த தனிப்படையினர், செல்வராஜ் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது, உள்ளூரில் தனது வீட்டின் அருகாமையில் உள்ள தனிப்பட்ட நபரின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக, அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் குறுச்செய்தியை அனுப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் உடனடியாக கைது செய்யப்பட்ட செல்வராஜ் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *