கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சிறுகமணி பேரூராட்சி சார்பில் பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் மண்பானையில் குடிநீர் வசதி செய்துள்ளனர். திருச்சியில் வரலாறு காணாத வகையில் வெப்பமானது அதிகரித்துள்ளது.
பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு உதவும் வகையில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள ஒவ்வொரு பேருந்து நிறுத்தங்களிலும் மண்பானையில் குடிநீர் வைத்துள்ளனர். இது குறித்து சிறுகமணி பேரூராட்சி செயல் அலுவலர் நளாயினி கூறுகையில்…. கோடை வெப்பத்தை எதிர் கொள்ள பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அதே சமயம் அவர்களுக்கு உடலுக்கு வெப்பத்தை தனித்து நன்மை பயக்கும் மண்பானையில் குடிநீர் வைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
இதுவரை 8 பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் வைத்துள்ளோம் இதனை கண்காணிக்க அதற்காக ஒரு ஊழியரையும் நியமித்து தினமும் அதில் தண்ணீர் நிரப்பும் பணியையும் செய்து வருகின்றனர்என்றார். ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் மண்பானையில் குடிநீர் வசதி செய்துள்ளதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments