Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தீ விபத்தில் வீணான  உணவுகள் பசியார வைத்த மநீம வேட்பாளர்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வீரசக்தி போட்டியிடுகிறார். அவர் கே.கே. நகர், காஜாமலை கீழ சிந்தாமணி, மேலசிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில்  வாக்குகளை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது பூசாரி தெருவில் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது வாணவேடிக்கைகள் வெடித்த போது தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அன்னதானம் செய்வதற்காக தயாராக இருந்த உணவுகள்  தீ விபத்தில் அனைத்தும் வீணாகியது.

தகவலறிந்து உடனடியாக வந்த மநீம வேட்பாளர் வீரசக்தி தீ விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் நேரடியாக சந்தித்து என்ன உதவி வேண்டும் என கேட்டறிந்தார். நான் வாக்கு கேட்பதற்காக உங்களிடம் வரவில்லை. அப்போது அவர்கள் அன்னதானம் செய்வதற்காக வைத்திருந்த உணவுகள் அனைத்தும் தீயில் வீணாகிவிட்டது உணவு இல்லை என தெரிவித்தனர். உடனடியாக அருகில் இருந்த உணவகத்தில் இருந்து 600 பேருக்கு உணவு தயார் செய்து கொடுத்து அனுப்பினார்.

நான் வாக்கை பெறுவதற்காக உங்களுக்கு இந்த உதவி செய்யவில்லை. பொது மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பது தான் சட்டமன்ற உறுப்பினரின் கடமை. சட்டமன்ற உறுப்பினராக என்ன தேர்ந்தெடுத்தால் உங்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளை முதலில் காண்போம் உங்களுடைய கோரிக்கைகளை நேரில் வந்து கேட்டு அறிந்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்வேன் என்று வாக்குறுதி அளித்தார்.

அப்பகுதி மக்கள் உடனடியாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்திக்கு நன்றி தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல் மற்ற கட்சியினரும் வந்து பார்த்து விட்டு ஆறுதல் கூறி உதவிகளை என்ன வேண்டும் என்று கேட்டு சென்றனர். ஆனால் உணவு வீணாகியது என்று தெரிந்தவுடன் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் உடனடியாக உணவுக்கு ஏற்பாடு செய்து அனைவரையும் பசியாற்றினார் என அப்பகுதி மக்கள் நெகிழ்ந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *