திருச்சி மாவட்டம் மணப்பாறை தந்தை பெரியார் சிலை அருகே இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் மணிப்பூரில் பழங்குடி பெண்கள் மீது அரங்கேறும் பாலியல் வன்கொடுமையை வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாதர் தேசிய சம்மேளன ஒன்றிய செயலாளர் பிரேமாவதி தலைமை வகித்தார். இந்திய மாதர் தேசிய சம்மேளன நகர செயலாளர் ராகமத்துனிஷா ரேணுகா முன்னிலை வகித்தனர். இந்திய மாதர் தேசிய சம்மேளன நகர தலைவரும் நகர்மன்ற உறுப்பினர் மனோன்மணி கண்டன உரை நிகழ்தினார்.
ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் சி.பி.ஐ நகர செயலாளர் ஜனசக்தி உசேன் ஒன்றிய துணைச் செயலாளர் பெருமாள் இந்திய மாதர் தேசிய சம்மேளன டி.ஆர். ஜெயலட்சுமி ரஸ்யா மீனாட்சி மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments