Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பள்ளி மாணவனின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கதிரவன் உள்ளார். இவர் அவரது தொகுதியில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். மேலும் தொகுதி  மக்களின் கோரிக்கைகளை எம்எல்ஏ கதிரவன் பொதுமக்களை தினமும் சந்தித்து மனுகளை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரிதீஷ் (10) அங்கு உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இப்பள்ளியில் அருகே தான் மனச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில்  தன்னந்தனியாக வந்த மாணவன் ஒரு மனுவை எழுதிக் கொண்டு எம்எல்ஏ-வை சந்தித்து கொடுத்துள்ளார். அந்த மனுவில் தன்னிடம் ஸ்மார்ட்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியவில்லை.

எனவே எனக்கு ஸ்மார்ட் போன் வாங்கித் தாருங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை பெற்றுக்கொண்டு அந்த மாணவரை அனுப்பி வைத்த எம்எல்ஏ கதிரவன் மறுநாளே ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி மாணவன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இதை கண்ட மாணவர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி மாணவன் கொடுத்த கோரிக்கை மனுவிற்கு உடனடியாக நிறைவேற்றிய எம்எல்ஏவின் செயலுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *