திருச்சி மேலப்புதூர் தேவாலயத்தில், சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சாமி அஸ்திக்கு திருச்சியில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் கொரோன மூன்றாவது அலை,அச்சுறுத்தி வருவதால், கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டுள்ளது
தமிழகத்திலும், ஆடி கிருத்திகை, ஆடி 18 போன்ற பண்டிகைக்கு, கோவிலில் சுவாமி தரிசனத்துக்கும், ஆற்றில் புனித நீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கிறித்தவ தேவாலயங்களில் வழக்கம்போல், கட்டுப்பாடுகளை மீறி, திருப்பலி கூட்டங்கள் நடத்தப்படுகிறது. முன்னதாக, ஸ்டேன் சாமியின் அஸ்தி, தேவாலயத்தில் வைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பல்வேறு தேவாலயங்களின் பங்குதந்தைகள், குருமார்கள், போன்ற மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
திருச்சி மேலப்புதூர் தேவாலயத்தில், மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில், மக்கள் நல ஆர்வலர் ஸ்டேன் சாமிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கொரோன கட்டுப்பாடுகளை கண்டுகொள்ளாமல் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மொத்தத்தில், கொரோனா கட்டுப்பாடுகள், கடந்த இரண்டு நாட்கள் கடுமையாக்கப்பட்டிருந்த நிலையில், அதை பொருட்படுத்தாமல்,
போலீஸ் பாதுகாப்பு போடபட்டு நடந்த இரங்கல் கூட்டத்தில், தனி மனித இடைவெளி போன்ற விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வில்லை.
இதனால் கொரோனா வைரஸ் பரவும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments