திருச்சி, தில்லைநகர், அதிமுக வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி தலைமை வகித்தார். கடந்த பதினொன்றாம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் இக்கூட்டத்தில் தெரிவித்துக் கொண்டனர். அதிமுக அமைப்பு தேர்தலில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு குடிநீர் இணைப்பு உயர்வு விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசை கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் வருகிற திங்கட்கிழமை 25ஆம் தேதி காலை 10 மணி அளவில் முசிறி கைகாட்டி அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் கழக பணிகளை சிறப்பாக எழுச்சியுடன் நடத்துவதற்கு, கழக நிர்வாகிகளை சந்தித்து ஒரு நாளைக்கு ஐந்து ஊராட்சிகள் வீதம், ஐந்து இடங்களில் ஊராட்சிக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர் பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் ஆவின் சேர்மன், திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் C.கார்த்திகேயன் ஏற்பாட்டில் திருச்சி மாநகர் மாவட்ட கழக அவைத் தலைவர் ஐயப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருகிற 26 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 10 மணி – திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், அண்ணாசிலை அருகே முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் விடியா திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments