பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில் சாதி ,மத மறுப்பு இணைத்தேடல் “மன்றல்” பெருவிழா திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று காலை 10:30 மணி அளவில் தொடங்கியது திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் விழாவினை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்த இணை தேடல் நிகழ்வில் முதல் நிகழ்ச்சியாக கரூர் மாவட்டம் அரவா குறிச்சி குப்புசாமி கண்ணம்மாள் ஆகியோரின் மகள் மரகதம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கொட்டாம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் கலாவதி ஆகியோரின் மகன் கனகராஜ் ஆகியோர்கள் சாதி மறுப்பு விதவை திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் இணை தேடல் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி வரை நடைபெறுகிறது இதில் ஏராளமான பெற்றோர்கள் தனது மகள்களுக்கும் மகன்களுக்கும் இணை தேடலை நடத்தி வருகின்றனர் சிறப்பு வாய்ப்பாக இந்நிகழ்வில் மனம் முறிவு பெற்றவர்கள் விதவை திருமணம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கான இணைத்தேடலும் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments