திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதி சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் கார்த்திக் (25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இளம் பெண் கிருஷ்ணவேணி (23) என்பவருக்கும் சென்ற மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் மாமியார் வீட்டுக்கு விருந்திற்கு சென்ற புது மணப்பெண் கிருஷ்ணவேணி தனது தாலியை கழட்டி வீட்டில் வைத்துவிட்டு மாயமாகிவிட்டார். இதுப்பற்றி கணவர் கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருமணம் ஆகி 20 நாட்கள ஆன இளம் புது பெண் யாரும் கடத்திச் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காதல் விவரமாக என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments