திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4 ,வார்டு எண் : 54, பெரியமிளகுபாறை கோரிமேடு, 56வது வார்டு, கருமண்டபம் சமத்துவபுரம் மற்றும் மண்டலம் எண் : 5, வார்டு எண் 11 சோழராஜபுரம் ஆகிய பகுதிகளில் சமுதாய கழிப்பிடத்தை தொண்டு நிறுவனங்கள் மூலம் பராமரிக்கப்படும் கழிப்பறைகளை மேயர் மு.அன்பழகன் சுகாதாரம் குறித்தும், அதன் தூய்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அங்கு பணியாற்றும் பணியாளர்களிடம் ஒரு நாளைக்கு எவ்வளவு மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்றும் கேட்டறிந்து தினமும் இரண்டு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும். அதேபோல வெளிப்புற தோற்றத்தை குப்பைகள் இல்லாமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் மண்டல தலைவர்கள் துர்கா தேவி , விஜயலட்சுமிகண்ணன், உதவி ஆணையர்கள் சண்முகம், வெங்கட்ராமன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர்கள் , இளநிலை பொறியாளர்கள் ஆய்வின்போது உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments