திமுக முதன்மைச் செயலாளர் – தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு உடன்பிறந்த சகோதரரும், தொழிலதிபருமான ராமஜெயத்தின் நினைவு தினமான இன்று, திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து திருச்சி பாராளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ மரியாதை செலுத்தினார். அமைச்சர் நேரு, பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு மற்றும் தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உடனிந்தனர்.
இந்நிகழ்வில், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் புதூர் மு.பூமிநாதன், மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பெல்.இராசமாணிக்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments