திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (19). இளங்காகுறிச்சி ரோட்டில் உள்ள மெக்கானிக் பட்டறையில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
நேற்று வேலை முடிந்ததும் இவரது சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது தேசிய நெடுஞ்சாலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,
விபத்து குறித்து வையம்பட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் ஆரோன் ஜென்மராகினி சம்பவ இடத்தில் விசாரித்து பிரேதத்தை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments