நூறு சதவீத நூலக வாசகர்களை கொண்டபுத்தூர் ஆல்செயின்ட்ஸ் உயர்நிலைப்பள்ளிமாணவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. புத்தூர் ஆல்செயின்ட்ஸ் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் தாஸ் வரவேற்றார். புத்தூர் கிளை நூலகர் புகழேந்தி, பள்ளி துணை ஆய்வாளர் கோபிநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். பள்ளி தாளாளர் ராஜைய்யா நோக்க உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்து அழகன் பங்கேற்று மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டையை வழங்கி பேசுகையில்… பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் படிக்கும் பழக்கத்தினை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.அவ்வகையில் நூறு சதவீத நூலக வாசகர்களை கொண்டபுத்தூர் ஆல்செயின்ட்ஸ் உயர்நிலைப்பள்ளி செயல் பாராட்டிற்குரியது.
நூலகம் தகவல், எழுத்தறிவு, கல்வி மற்றும் கலாச்சார கருப்பொருளை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.பள்ளி என்பது பாடநூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம் ஆகும். நூலகமோ அந்த அறிவை செம்மைப்படுத்தும் மற்றொரு களமாகும். பள்ளியும் நூலகமும் இணைபிரியாதவை ஆகும். குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.
வாரத்திற்கு ஒரு முறை படித்த புத்தகத்தை திறனாய்வு செய்ய வேண்டும். அந்த மாணவர்களை மாவட்டம், மாநில அளவில் தேர்வு செய்து பரிசு வழங்கி கௌரவிக்கப் படுவார்கள். மேலும் புத்தக செயலியை பயன்படுத்தி புத்தகத்தை வாசிக்க வேண்டும். வாசிப்பை நேசிக்க வேண்டும். கருத்துக்களை மாணவர்கள் பேசிக்க வேண்டும் என்றார். நிறைவாக உதவி தலைமை ஆசிரியர் சீபா லூசி ரத்னா நன்றிக் கூறினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments