திருச்சி VDart நிறுவனத்தின் சார்பில் Hazarath nathervali தொடக்கப்பள்ளியில் இன்று 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாதவிடாய் காலத்தை எவ்வாறு எதிர்கொள்வது அதற்கான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் அற்ற சானிட்டரி நாப்கின்கள் தேர்வு செய்யும் முறை மற்றும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது மீண்டும் அதனை சுகாதார முறையில் பள்ளி நேரங்களில் எவ்வாறு அப்புறப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மாதவிடாய் காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய ஆலோசனைகளும் காணொளி மூலம் மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் 35க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து செல்வதே நோக்கமாகும் ..
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments