திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (50). மயிலாடுதுறை மாவட்டம் கருவாட்டுத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (38). இவர்கள் இருவரும் திருச்சியில் தங்கி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள். ஒரே இடத்தில் தங்கி வேலை செய்வதால் நண்பர்களாகிறார்கள்.
இந்நிலையில் காந்தி சிலை அருகே உள்ள தர்பார் மேடு பகுதியில் சந்தோஷ் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெங்கடேஷ் தனக்கும் சாப்பாடு வாங்கித் தருமாறு கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த சந்தோஷ் வெங்கடேசை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் கையில் வைத்திருந்த பிளேடால் சந்தோஷ் கழுத்துப் பகுதியில் அறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பலத்த காயமடைந்த அவர் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வெங்கடேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC
Comments