Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

எந்த போராட்டத்தையும் நடத்துவதற்கு வியாபாரிகள் தயாராக இருக்கிறோம் – திருச்சியில் வெள்ளையன் பேட்டி!

திருச்சி காந்தி மார்க்கெட்டிலுள்ள வியாபாரிகளை தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் சந்தித்துப் பேசினார். முன்னதாக அவர் அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisement

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது….. தமிழகத்தில் காந்தியடிகளால் அடிக்கல் நாட்டப்பட்ட ஒரே மார்க்கெட் இந்த காந்தி மார்க்கெட் தான். மூன்று தலைமுறைக்கும் மேலாக இயங்கும் இந்த காந்தி மார்க்கெட் இங்கேயே தொடர்ந்து நடைபெற வேண்டும். காலத்திற்கு தகுந்தாற்போல் விரிவாக்கம் செய்து, இந்த இடத்திலேயே தொடர்ந்து நடைபெற வேண்டும். அதற்காக எந்த போராட்டத்தையும் நடத்துவதற்கு வியாபாரிகள் தயாராக இருக்கிறோம்.

காந்தி மார்க்கெட் தொடர்ந்து இங்கேயே நடுவில் வரும் சூழல் ஏற்படும் வரை தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை ஓயாது. விவசாயிகளின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு தெரிவிக்கிறோம். விவசாயிகளின் கோரிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட கூட இல்லை. விவசாயிகளின் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். 

Advertisement

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையை பொருத்தவரை உள்நாட்டு விவசாயம், வணிகத்தில் அந்நிய ஆதிக்கம் கூடாது என்று கூறும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தருவோம். அந்நிய சக்திகளை விரட்டியடிக்கும் செயலில் ஈடுபடுவோம். தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாவட்டத் தலைவர் ரவி முத்துராஜா, மாவட்ட செயலாளர் எஸ்.பி.பாபு, பொருளாளர் கணேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *