திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தமாடிப்பட்டி பகுதியில் 2020 மற்றும் 2021 வது நிதியாண்டில் ரூ 24.60 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தமாடிப்பட்டியில் 2020 மற்றும் 2021 வது ஆண்டு பொது நிதியில் ரூ 24.60 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. அப்படி ஒதுக்கப்பட்ட நிதியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
இந்த விழாவில் , திருச்சி மாவட்ட ஊராட்சி இயக்குனர் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன், ஸ்ரீதர் ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் ஊராட்சி மன்ற தலைவர் ஜோஸ்பின் ஜெயராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments