பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2019 – 2020 தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்
சோழமாதேவியில் அமைந்துள்ள அரசினர் ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளிக்கு சத்துணவு கூடம் 4,52,000 மதிப்பிலும், சிலோன் காலனி போர்வெல் 1,25,000 மதிப்பிலும்
கும்பக்குடி கோவிலில் அமைந்துள்ள அடிபம்பு ரூபாய் 1,00,000 மதிப்பிலும், பூலங்குடி காலனி சிமெண்டு சாலை 6,50,000 மதிப்பிலும், பூலாங்குடி மேல்நிலை 30,000 லிட்டர் கொள்ளளவு சுமார் 10 லட்சம் மதிப்பில் நீர்த்தேக்கத் தொட்டி ஆகிய திட்டங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன் ஒன்றிய கழக செயலாளர் மாரியப்பன் கே.எஸ்.எம் கருணாநிதி, சேர்மன் சத்யாகோவிந்தராஜ் , நவல்பட்டு சண்முகம், கயல்விழி கங்காதரன் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
Comments