திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடுபவர்களால் நேற்று(21.11.2021) அதிகாலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வீரமரணமடைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தினரை இன்று (22.11.2021)நேரில் சந்தித்து தனது இரங்கலைத் தெரிவித்து, அஞ்சலி செலுத்தினார்.இந்நிகழ்வில், திருச்சிராப்பள்ளி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், முன்னாள் துணை மேயர் மு.அன்பழகன், மாவட்ட பொறுப்பாளர் வைரமணி உள்ளிட்டோர் உடனிருந்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னல் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசும் வீரமரணமடைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தினரை திருவெறும்பூர் வட்டம்,சோழமாநகர் இல்லத்தில் இன்று (22.11.2021)நேரில் சந்தித்து தனது இரங்கலைத் தெரிவித்து அஞ்சலி செலுத்தினார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments