திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண – சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழா கடந்த 28ம் தேதி தொடங்கியது. இந்த சாரண – சாரணியர் இயக்க மாணவ- மாணவிகள் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் என சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 7 நாட்கள் அதே பகுதியில் தங்குகின்றனர்.
இதில் சாரண- சாரணிய இயக்கத்தை சேர்ந்தவர்களின் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவ- மாணவிகள் வந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு பாரத சாரண – சாரணியர் இயக்க தலைவரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யமொழி நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு சென்று ஆய்வு செய்து சாரணர்- சாரணியரின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
இந்த நிலையில் இரவில் சாரணர்-சாரணியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாரத சாரண – சாரணியர் இயக்க தலைவரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யமொழி மற்றும் மாவட்ட மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் சாரணியர் குழு நடனமாடினர். இதில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு நடனமாடினர். இதனை கண்ட சாரணர்-சாரணியர் மற்றும் அரசு அலுவலர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments