திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதிக்குட்பட்ட T.இடையப்பட்டி. இக்கிராமத்தில் உள்ள கோயில் திருவிழா நடைபெற்றது. இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் பழனியாண்டி தலைமையில் கோயில் மற்றும் திமுக நிர்வாகிகள் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்து அழைத்திருந்தனர்.
இந்த அழைப்பை ஏற்று கோயிலுக்கு ரூ.10,000 நன்கொடை வழங்கி விழாவிற்கு வருவதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து கடந்த 29-ம்தேதி அப்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்ந அமைச்சர் மகேஸ்-க்கு கோயிலில் சார்பில் பூரண கும்பங்களுடன் கிராம மக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் காத்திருந்தனர். ஆனால், அவர் அக்கோயிலுக்கு மட்டும் செல்லவில்லை.
இதனால், தங்கள் பகுதிக்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதிய, அமைச்சர் தந்த ரூ.10,000 நன்கொடையுடன் திமுக நிர்வாகிகள் தங்கள் பங்களிப்பாக ரூ.100-யை இணைத்து ரூ. 10,100 ஆக அமைச்சர் “P மகேஸ் பொய்யாமொழி, ஸ்கூல் எஜூகேஷன் மினிஸ்டர்” – என்று D D (862685) எடுத்து, சால்வைகள், பிரசாதம் இணைத்து அமைச்சருக்கே வழங்க கோரி நிர்வாகி பழனியாண்டியிடமே ஒப்படைத்தனர். இதனால் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்டுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments